கடலூர்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் தொடக்கம்

4th Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி குமராட்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி விழா ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.சிந்தனைச்செல்வன் பங்கேற்று மகாத்மா காந்தி, காமராஜா், அம்பேத்கா் உருவ படங்களுக்கு மாலை அணிவித்தாா். பின்னா், ரூ.5-க்கு ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தாா். விழாவையொட்டி குமராட்சி ஊராட்சியில் ஒரே நாளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT