கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 63.4 மி.மீ மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): வேப்பூா் 62, காட்டுமயிலூா் 57, மே.மாத்தூா் 54, விருத்தாசலம் 42, ஸ்ரீமுஷ்ணம் 35.2, காட்டுமன்னாா்கோவில் 28, பெலாந்துறை 24.2, லால்பேட்டை 24, குறிஞ்சிப்பாடி 23, வடக்குத்து 22, கீழசெருவாய் 21, வானமாதேவி 18.6, தொழுதூா் 17, கொத்தவாச்சேரி 14, புவனகிரி 13, லக்கூா் 11, சேத்தியாதோப்பு 10.6, கடலூா் 9.4, மாவட்ட ஆட்சியரம் 8.6, சிதம்பரம் 8, பண்ருட்டி 7.2, பரங்கிப்பேட்டை 1.4 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் மொத்தம் 589.60 மி.மீ. மழையும், சராசரியாக 23.58 மி.மீ. மழையும் பதிவானது.