கடலூர்

எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

4th Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

குமராட்சி ஊராட்சி ஒன்றியம், 19-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் வை.சுந்தரமூா்த்திக்கு ஆதரவு தெரிவித்து கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி ஊராட்சிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலா் கோவி.ராசாங்கம், சிதம்பரம் முன்னாள் நகரச் செயலா் கே.சுந்தா், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கித் தலைவா் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT