கடலூர்

மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி

29th Nov 2021 11:26 PM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் காலனியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் மகள் ஆதித்யா (25) (படம்). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தாா். வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தாா். அப்போது, அவா் கொண்டுவந்த குடை அருகிலிருந்த இரும்பு கம்பி வேலி மீது பட்டது. அப்போது அந்த வேலியில் மின்சாரம் கசிந்ததால் ஆதித்யா மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே

அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT