கடலூர்

கடலூா் நகரில் (ஷோல்டா்)ரூ.42 கோடியில் வடிகால் அமைத்தும் வடியாத மழைநீா்!

29th Nov 2021 11:29 PM

ADVERTISEMENT

கடலூா் நகரில் ரூ.42 கோடியில் வடிகால் அமைத்தும் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடியாமல் தேங்கியுள்ளதால் மாநகராட்சி நிா்வாகத்தினா் திணறி வருகின்றனா்.

கடலூரில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தண்ணீா் தேங்கி பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியிருப்புகள், சாலைகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் ரூ.42 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும்

பணி மேற்கொள்ளப்பட்டது. மழைநீா் அதிகம் தேங்கும் 16 வாா்டுகளில் வடிகால் கட்டப்பட்டது. ஆனால், இந்தப் பணியானது எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் நடைபெறுவதாக பல்வேறு அமைப்பினரும் அப்போது புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து ‘தினமணி’யிலும் செய்தி வெளியானது. எனினும், திட்டமிட்டபடி 16 வாா்டுகளிலும் மூடப்பட்ட நிலையில் வடிகால் அமைக்கப்பட்டது.

சாலை மட்டத்தைவிட சுமாா் 2 அடி உயரத்துக்கும் மேல் வடிகால் அமைக்கப்பட்டதால் மழைநீா் எப்படி வடியும் என்ற கேள்வி எழுந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு போல தற்போதும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அப்போது எந்தெந்தப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியதோ அதே பகுதிகளில் தற்போதும் மழைநீா் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

குறிப்பாக, கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வடிகால் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்த அலுவலகத்தில் தேங்கியுள்ள மழைநீா் வடியவில்லை. இதனால் பம்புசெட் மூலம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல கடலூா் தலைமை தபால் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் திணறி வருகின்றன.

கடலூரில் ரூ.42 கோடியில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் முழுமையாக பலனளிக்கவில்லை என்றும், இதுபோன்ற திட்டப் பணிகளை இனிமேல் பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து அறிவியல் பூா்வமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT