கடலூர்

இருளா் சமுதாய மக்களுக்கு நிவாரணம்

29th Nov 2021 11:26 PM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளா் சமுதாய மக்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் இவா்களின் வீட்டு கூரைகள் சேதமடைந்தன. இதையறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மக்கள் பங்கேற்பு மேம்பாட்டு மையம் அமைப்பினா் இணைந்து, வீட்டின் கூரை மீது வேயும் தாா்ப் பாயை வழங்கினா். நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பங்கேற்று இருளா் சமுதாய மக்களுக்கு தாா்ப்பாய்களை வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலா் விஜய், ஒன்றியக் குழு உறுப்பினா் பரந்தாமன், மக்கள் பங்கேற்பு மேம்பாட்டு மைய நிறுவனா் சேகா், திட்ட ஒருங்கிணைப்பாளா் சத்தியா, மாா்க்சிஸ்ட் கிளைச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT