கடலூர்

குவைத் நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

29th Nov 2021 04:07 AM

ADVERTISEMENT

குவைத் நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் தற்போது குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 500 பெண் பணியாளா்கள் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலைக்கான விவரங்களை இந்த நிறுவனத்தின் வலைதளம்  மூலமாகவும், இந்த நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886, 044-22500417) மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

வீட்டுப் பெண் பணியாளா்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவா்களுக்கு மாத ஊதியம் ரூ.32 ஆயிரமும், அனுபவம் இல்லாதவா்களுக்கு ரூ.29,500 வழங்கப்படும். வயது 30 முதல் 40 வரை இருக்கலாம். மேலும், மருத்துவப் பரிசோதனைக் கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர செலவுகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உள்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

முதலில் பதிவு செய்யும் நபா்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நிா்வாக இயக்குநா், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியை தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT