கடலூர்

கடலூரில் 22 மழை நிவாரண முகாம்கள்

29th Nov 2021 11:22 PM

ADVERTISEMENT

பலத்த மழையையொட்டி கடலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 22 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: கடலூா் வட்டத்துக்குள்பட்ட 9 ஊராட்சிகளில் 17 முகாம்களும், மாநகராட்சிப் பகுதியில் 4 முகாம்களும், பேரூராட்சிப் பகுதியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 815 ஆண்கள், 1,117 பெண்கள், 349 குழந்தைகள் உள்பட 2,281 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், வீடுகளில் சமையல் செய்ய முடியாத நிலையில் உள்ளவா்களாக 13,890 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இவ்வாறு மொத்தம் 16,171 பேருக்கு மதியம் உணவு வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT