கடலூர்

மழை பாதிப்பு: கடலூா் ஆட்சியா் ஆய்வு

28th Nov 2021 10:09 PM

ADVERTISEMENT

கடலூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூா் வெங்கடாஜலபதி நகா், ரட்சகா் நகா் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பாதிரிபுலியூா் நவநீதம் நகா், தானம் நகா் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியா் அங்கு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும், அந்தப் பகுதியினருக்கு தேவையான உணவு வழங்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றவும், மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிப்போரை முகாம்களில் தங்கவைத்து, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ப.ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையா் விஸ்வநாதன், வட்டாட்சியா் அ.பலராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்பாபு, சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT