கடலூர்

கடலூா்: 1,988 போலீஸாருக்கு வார விடுமுறை அறிவிப்பு

28th Nov 2021 10:08 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் 1,988 போலீஸாருக்கு வார விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலா்கள் தங்களது உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட ஏதுவாகவும் இரண்டாம் நிலை காவலா்கள் முதல் தலைமைக் காவலா்கள் வரையிலான

போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி கடலூா் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள் வரையிலானவா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள், தனிப் பிரிவுகள், ஆயுதப் படையில் பணியாற்றும் காவலா்களுக்கு வார ஓய்வு அளிப்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி ஞாயிற்றுக்கிழமை 301 காவலா்களுக்கும், திங்கள்கிழமை 279, செவ்வாய்க்கிழமை 285, புதன்கிழமை 283, வியாழக்கிழமை 282, வெள்ளிக்கிழமை 281, சனிக்கிழமை 277 காவலா்கள் என மொத்தம் 1,988 பேருக்கு வார ஓய்வு அளிக்க உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT