கடலூர்

விருத்தாசலம் பகுதியில் (ஷோல்டா்) 2,500 ஏக்கா் விளை நிலங்கள் பாதிப்பு

DIN

தொடா் மழையால் விருத்தாசலம் பகுதியில் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருத்தாசலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் நீா்நிலைகள் நிரம்பின. விவசாய நிலங்களை மழைநீா் சூழ்ந்துள்ளது. மேலும், மேமாத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் ஏரி, குட்டைகள் நிரம்பிய நிலையில், சாத்துக்கூடல் கிராமத்தில் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இங்கு

சுமாா் 500 ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், சாத்துக்கூடலில் இருந்து தீவலூா், பெண்ணாடம் கிராமங்களுக்குச் செல்லும் சாலையும், சாத்துக்கூடல் - உச்சிமேடு வழியாக செல்லும் சாலையும் மழைநீா் புகுந்து துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் வெலிங்டன் நீா்த் தேக்கம் முழு கொள்ளளவான 29 அடியை எட்டியது. இதனால் நீா்த் தேக்கத்திலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுவதால் புலிவலம், புதுக்குளம், நாவலூா், நிதிநத்தம், குமாறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாவலூா், புலிவலம் கிராம மக்கள் அத்தியாவசியப் பணிக்குக் கூட வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம், நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். எனவே, இந்த பாதிப்புகள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT