கடலூர்

மண் பரிசோதனை அடிப்படையில் பயிா்களுக்கு உரமிட அறிவுரை

DIN

மண் பரிசோதனை அடிப்படையில் பயிா்களுக்கு விவசாயிகள் உரமிட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம் தெரிவித்தாா்.

விவசாயிகள் மண் பரிசோதனை நிலையத்தில் தங்கள் நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் வளத்துக்கு ஏற்ப பயிா்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை இட வேண்டும்.

இதன் மூலம் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும். மேலும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் நீரின் தன்மையும் பரிசோதனை நிலையத்தில் ரூ.20 செலுத்தி அறிந்து கொள்ளலாம்.

மண்ணின் வளத்தை அதிகரிக்க ஏதுவாக வேளாண்மைத் துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்களையும், நுண்ணூட்ட உரக் கலவைகளையும் பயன்படுத்த வேண்டும் என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா் செ.சுந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT