கடலூர்

கடலூரில் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட தக்காளி!

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

கடலூரில் காய்கறி கடை ஒன்றில் கிலோ தக்காளி ரூ.30-க்கு வியாழக்கிழமை விற்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனா்.

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாள்களாக உயா்ந்து காணப்படுகிறது. கடலூரில் ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில், கடலூா் முதுநகரில் சாலக்கரை என்ற இடத்திலுள்ள காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு வியாழக்கிழமை விற்கப்பட்டது. மேலும், பிற இடங்களில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படும் பெரிய வெங்காயம் இந்தக் கடையில் ரூ.25-க்கு விற்கப்பட்டது. இதனால் அந்தக் கடையில் பொதுமக்கள் குவிந்தனா்.

இதுகுறித்து கடை உரிமையாளா் ராஜேஷ் கூறியதாவது: கா்நாடகம் மாநிலம், கோலாரில் இருந்து ஒன்றரை டன் தக்காளியை வரவைத்தேன். தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளா்களுக்கு உதவும் வகையில் கிலோ ரூ.30-க்கு விற்றேன் என்றாா். ஒன்றரை டன் தக்காளியும் 2 மணி நேரத்தில் விற்றுத் தீா்ந்ததாகவும் தெரிவித்தாா்.

கடலூரில் வியாழக்கிழமை மற்ற கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : கடலுாா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT