கடலூர்

வணிக வரித் துறையினா் தற்செயல் விடுப்புப் போராட்டம்

25th Nov 2021 08:32 AM

ADVERTISEMENT

கடலூரில் வணிக வரித் துறை அலுவலகம் எதிரே வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வணிக வரித் துறையில் பணியாற்றும் ஊழியா்களை நிா்வாகக் காரணங்கள், பொதுமக்கள் நலன் கருதி எனக் கூறி பல்வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனராம். இதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புதன்கிழமை மாவட்டம் முழுவதும் வணிக வரித் துறையினா் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கடலூரிலுள்ள வணிக வரித் துறை அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் என்.ஜனாா்த்தனன் கூறியதாவது: முறையற்ற பணியிட மாறுதலைக் கண்டித்து, துறைச் செயலா், முதல்வா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடந்த 17-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சுமாா் 6 ஆயிரம் வணிக வரித் துறையினா் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT