கடலூர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு உதவி

24th Nov 2021 08:41 AM

ADVERTISEMENT

சிதம்பரம் இன்னா்வீல் சங்கம், பழநிபாபு அணி வணிகம் அமைப்பினா் இணைந்து சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் அல்லது தந்தை இல்லாத மற்றும் மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியை கி.ஹேமலதா வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க சாசனத் தலைவா் பி.முகமது யாசின், வரலட்சுமி கேசவன், கோமதி கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இன்னா்வீல் சங்கத் தலைவி வேதா சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பழநிபாபு, பா.பழநி, ஜோதிமணி பழநி, அகிலா ஆகியோா் பங்கேற்று 52 மாணவிகளுக்கு ஆடைகள், நோட்டுகள், பேனா,பென்சில், சோப்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு, ஊக்கத் தொகையை வழங்கினா்.

நிகழ்ச்சியில் இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் முத்து நாச்சியம்மை, பிரேமா முத்து, கலையரசி, இந்திரா சுப்பிரமணியம், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT