கடலூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

10th Nov 2021 08:38 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மனைவி காசியம்மாள் (65). இவருக்குச் சொந்தமான ஆடு ஒன்று திங்கள்கிழமை மேய்ச்சலுக்குச் சென்ற நிலையில் திரும்பவில்லை. ஆட்டை தேடிச் சென்ற காசியம்மாளும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்ததில், முருகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மின் கம்பத்தின் அருகே காசியம்மாளும், அவரது ஆடும் மின்சாரம் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT