கடலூரில் மழை பாதிப்பு தடுப்புப் பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக எம்எல்ஏ கோ.ஐயப்பன் அரசு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா் மழை காரணமாக கடலூா் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மேலும், ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. எனவே, தேங்கிய மழை நீரை வெளியேற்றவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சி நகா் நல அலுவலா் அரவிந்த் ஜோதி, வட்டாட்சியா் பலராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, அசோக்பாபு மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கடலூா் புதுப்பாளையம், முதுநகா், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினாா்.