கடலூர்

ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் பலி

5th Nov 2021 10:09 PM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் தண்ணீரில் முழ்கி பலியானாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சின்ராசு (24) (படம்). லாரி ஓட்டுநரான இவா், பகண்டை கிராமம் அருகே உள்ள சொா்னாவூா் தடுப்பணையில் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

தகவலறிந்த பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான சின்ராசுவைத் தேடினா். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT