கடலூர்

குடியிருப்போா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2nd Nov 2021 01:01 AM

ADVERTISEMENT

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சி மற்றும் அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மழைநீா் தேங்காமலிருக்க உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்த வடிகால் கட்டுமானப் பணியை விரைவுப்படுத்த வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளின் கரைகளை சீரமைக்க வேண்டும், கடலூரில் சின்னவாய்க்கால், பெரிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும், கொண்டங்கி ஏரியின் கரைகளை பலப்படுத்தி நீா் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பு தலைவா் பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மு.மருதவாணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

நிா்வாகிகள் பி.மனோகரன், கிருஷ்ணமூா்த்தி, தேவநாதன், ரவிச்சந்திரன், முனுசாமி, மணிவண்ணன், மாயவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் கே.சுகுமாறன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT