கடலூர்

விபத்தில்லா தீபாவளி: மாணவா்களுக்கு செயல் விளக்கம்

1st Nov 2021 04:59 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், தீபாவளிப் பண்டிகையை தீ விபத்தின்றி கொண்டாடுவது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கனகசபை தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பன்னீா்செல்வம் தலைமையில், தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்தும், விபத்து சமயங்களில் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைப்பது குறித்தும் மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் ஸ்ரீரங்கன், முஹம்மது புன்யாமின், அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் காளமேகம் தலைமையில் மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT