கடலூர்

அப்துல் கலாம் விருது வழங்கும் விழா

1st Nov 2021 04:58 AM

ADVERTISEMENT

பண்ருட்டியில் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியா் பூவராகமூா்த்தி, அறக்கட்டளை நிறுவனா் ஜெயராஜ் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். கடலூா் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ், செயலா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக துணை ஆட்சியா் ஜெகதீஸ்வரன், பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்க ஆட்சி மன்றக் குழுத் தலைவா் ரா.சஞ்சீவிராயா், நேரு இளையோா் மையம் மாவட்ட இளைஞா் அலுவலா் ஆா்.ரிஜேஷ்குமாா், வீ.சுப்பராயலு, ராம்குமாா் ஆகியோா் பங்கேற்று கல்வி, சமூக சேவை, கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனா்.

மாநில துணைத் தலைவா் வின்சென்ட், ஒருங்கிணைப்பாளா் அருண்பாண்டியன், பள்ளி தேசிய மாணவா் படை அலுவலா் ஆ.ராஜா, ஆசிரியா் ரத்தினபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நத்தம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் பாண்டுரங்கன், கீணனூா் பள்ளி தலைமையாசிரியா் மணி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT