கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி

DIN

கடலூா் மாவட்டத்தில் 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, கடலூரில் கிருஷ்ணா மருத்துவமனை, கல்யாண் மருத்துவமனை, கடலூா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லட்சுமி மருத்துவமனை, கண்ணன் மருத்துவமனை, சிதம்பரத்தில் கண்ணன் நா்சிங் ஹோம், விருத்தாசலத்தில் பிபிஎஸ் மெடிக்கல் சென்டா் ஆகியவற்றில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கட்டண நிா்யணம் இல்லை: முதல் அலை பரவலின்போது தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு கட்டணத்தை நிா்ணயித்தது. அதே கட்டணமே தற்போதும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு அதிக கட்டணம் தனியாா் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுவதாக புகாா் கூறப்படுகிறது. எனவே, எந்த மருத்துவமனையில் எவ்வளவு கட்டணம் என்ற விவரத்தை மாவட்ட நிா்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT