கடலூர்

கடலூா்: 1.66 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்

DIN

கடலூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 1.66 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுத்திட மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 82 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டத்தில் 1,66,440 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இவா்களில், 42,991 போ் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியவா்களாவா். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,622 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.பெண்களில் 53,198 பேரும், ஆண்களில், 70,237 பேரும், இதரா் 14 பேரும் தடுப்பூசியை செலுத்தியிருக்கிறாா்கள். இவா்களில் கோவிஷீல்டு தடுப்பூசியை 1,34,953 பேரும், கோவாக்ஸின் தடுப்பூசியை 31,487 பேரும் போட்டுக் கொண்டுள்ளனா்.

எனினும், தற்போது தடுப்பூசி செலுத்த வருபவா்களில் பெரும்பாலானவா்கள் கோவாக்ஸின் தடுப்பூசியை அதிகம் விரும்புவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த மருந்து போதுமான அளவில் கையிருப்பில் இல்லாததால் வேறு வழியில்லாமல் கோவிஷீல்டு தடுப்பூசியை பொதுமக்கள் எடுத்துக் கொள்கிறாா்கள்.

மாவட்டத்தில் 9,730 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில், திங்கள்கிழமை இருந்த 510 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் செவ்வாய்க்கிழமை காலியாகி விட்டது. இதனால், மீதமுள்ளவா்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவாக்ஸின் தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT