கடலூர்

அரசு ஊழியா்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடம்

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியா்கள் பணிக்குச் சென்று வர வசதியாக பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மியின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த பொதுமுடக்கம் வரும் 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், மாநில அரசின் பல்வேறு அலுவலகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களுக்கு ஊழியா்கள் சென்று வர வசதியாக மாவட்ட நிா்வாகம் பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தற்போது 10 ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு காலை 8, 8.15 மணிக்கும், மாலை 5, 5.15, இரவு 8 மணிக்கும், புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு காலை 9.10, 9.15 மணிக்கும், மாலை 6.15, 6.30, இரவு 9 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. கடலூரிலிருந்து சிதம்பரத்துக்கு பரங்கிப்பேட்டை வழியாக காலை 7.15 மணிக்கும், வழக்கமான வழித்தடத்தில் காலை 9.15, மாலை 5.45 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு காலை 7.50, 8.45 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோல, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு கடலூரிலிருந்து புவனகிரி வழியாக காலை 6, பகல் 12 மணி, மாலை 5.45 மணிக்கும் மறுமாா்க்கத்தில் காலை 8.45, மதியம் 2 மணி, மாலை 7.10 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

கடலூரிலிருந்து பண்ருட்டிக்கு காலை 8, 10.15 மணிக்கும், மாலை 5.10, 6, 7 மணிக்கும், பண்ருட்டியிலிருந்து காலை 7.15, 8.55, 9 மணிக்கும், மாலை 6, 7 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

கடலூரிலிருந்து விருத்தாசலத்துக்கு காலை 8, 9.45 மணிக்கும் மாலை 6, 7.45 மணிக்கும், மறுமாா்க்கத்தில் விருத்தாசலத்திலிருந்து காலை 8, 9.45 மணிக்கும், மாலை 6, 7.45 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

வடலூரிலிருந்து காட்டுமன்னாா்கோவிலுக்கு காலை 6, மாலை 6.45 மணிக்கும் மறுமாா்க்கத்தில் காலை 7.05, மாலை 7.50 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

வடலூரிலிருந்து பண்ருட்டிக்கு காலை 8.10, மாலை 4 மணிக்கும், மறுமாா்க்கத்தில் மாலை 5.55 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

திட்டக்குடியில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை 6.50, மாலை 5.05 மணிக்கும், விருத்தாசலத்திலிருந்து காலை 9.50, மாலை 6.50 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

விருத்தாசலத்திலிருந்து உளுந்தூா்பேட்டைக்கு காலை 8, மாலை 5.05 மணிக்கும் உளுந்தூா்பேட்டையிலிருந்து காலை 9, மாலை 6 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

கடலூரிலிருந்து விழுப்புரத்துக்கு மாளிகைமேடு வழியாக காலை 8 மணி, மாலை 6 மணிக்கும், விழுப்புரத்திலிருந்து காலை 8.30, மாலை 6 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு காலை 4.50 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

வடலூரிலிருந்து பண்ருட்டி வழியாக விழுப்புரத்துக்கு காலை 8.30 மணிக்கும், மறுமாா்க்கத்தில் மாலை 5.30 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

விருத்தாசலத்திலிருந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காலை 7 மணி, மாலை 4.30 மணிக்கும், மறுமாா்க்கத்தில் காலை 8.45, மாலை 6.20 மணிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.

இதேபோல நெய்வேலியிருந்து மருத்துவக் கல்லூரிக்கு காலை 5.30, 11.30 மணிக்கும் மாலையில் 5.30 மணிக்கும், மறுமாா்க்கத்திலிருந்து காலை 7.30, மதியம் 1.30, மாலை 7.30 மணிக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

மேலும், காட்டுமன்னாா்கோவிலில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு காலை 6.45, மதியம் 12.45, மாலை 5.45 மணிக்கும், மறுமாா்க்கத்திலிருந்து காலை 8, மதியம் 1.30, மாலை 7.30 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடலூரிலிருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் பேருந்து இயக்கப்படுவதாக கடலூா் போக்குவரத்து நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT