கடலூர்

அடிப்படை வசதி செய்துதரக் கோரி கரோனா நோயாளிகள் போராட்டம்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி நோயாளிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பல்கலைக்கழக விடுதியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகள் சுமாா் 400 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த மையத்தில் திங்கள்கிழமை மதியம் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படவில்லையாம். மேலும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனக்கூறி கரோனா நோயாளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், வட்டாட்சியா் ஆனந்த், அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் சீனுபாபு ஆகியோா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த மையத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக கழிப்பறை வசதி இல்லை எனவும் நோயாளிகள் தெரிவித்தனா். இதையடுத்து பெண் நோயாளிகளை எதிரே உள்ள திருவாங்கூா் விடுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், உணவு, குடிநீா் வசதி முழுமையாக செய்து தரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நோயாளிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT