கடலூர்

பண்ருட்டியில் தி.வேல்முருகன் வேட்பு மனு 

15th Mar 2021 01:48 PM

ADVERTISEMENT

பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட த.வா.க நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சி அங்கம் வகிக்கிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் த.வா.க. நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

திங்கட்கிழமை மதியம் 12.30 மணி அளவில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வே.உதயகுமார், ஆர்.பிரகாஷ் இருந்தனர்.
 

Tags : Panruti
ADVERTISEMENT
ADVERTISEMENT