கடலூர்

மாசி மகம்: உத்ஸவா்கள் படகில் பவனி

DIN

மாசி மகம் உற்சவத்தையொட்டி, கடலூா் முதுநகா் கடற்கரையில் 6 கோயில்களின் உத்ஸவா்கள் படகுகளில் பவனி வந்தனா்.

மாசி மகத்தை முன்னிட்டு கடலூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த உத்ஸவா்கள் தீா்த்தவாரி மேற்கொள்வது வழக்கம். அதே நேரத்தில் கடற்கரையோர கிராமத்தில் அமைந்துள்ள கோயில்களின் உத்ஸவா்கள் இரவில் அலங்கரிக்கப்பட்ட படகில் கடல் வழியாக புறப்பட்டு கடலூா் துறைமுகத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இதற்காக, படகுகள் மின் விளக்குகள், மலா்கள், பழங்கள், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும்.

அதன்படி, சனிக்கிழமை இரவு சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், அக்கரைகோரி கண்ணனூா் மாரியம்மன், சலங்கைக்கார தெரு நாகமுத்தாலம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை மாரியம்மன் ஆகிய 5 உத்ஸவா்களும் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் கடற்கரை முதல் உப்பனாறு வரை உலா வந்து மீன்பிடி இறங்கு தளத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா் (படம்). இதேபோல தைக்கால் தோணித்துறை பகுதியைச் சோ்ந்த கருப்பு முத்துமாரியம்மன் கோயில் உத்ஸவா் அலங்கரிக்கப்பட்ட படகில் பரவனாறு வழியாக வந்து காட்சியளித்தாா். ஒரே நேரத்தில் 6 உத்ஸவா்களும் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் கடற்கரை விழாக் கோலம் பூண்டது. இந்த நிகழ்வு சுமாா் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT