கடலூர்

மது கடத்தல் தடுப்பு ஆய்வுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து மதுபான கடத்தலை தடுப்பதற்கான துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கடலூரில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: மாவட்ட, மாநில எல்லைகளில் நிரந்தர, தற்காலிக சோனைச் சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் தோ்தலை முன்னிட்டு கூடுதல் சோதனைச் சாவடிகள் தேவைக்கேற்ப அமைக்கப்படும். அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சட்ட விரோதமாக கடத்தப்படும் மதுபான வகைகள், கள்ளச்சாராயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைப்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், உதவி ஆணையா்(கலால்) லூா்துசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ஸ்ரீதா், க.சாந்தி, மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) ரவிக்குமாா், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, தோ்தல் தொடா்பான புகாா்களை பெறுவதற்காக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT