கடலூர்

தோ்தல் பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்தக் கூடாது: கடலூா் மாவட்ட ஆட்சியா்

DIN

வழிபாட்டுத் தலங்களை தோ்தல் பிரசார களமாக பயன்படுத்தக் கூடாது என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் குறித்து கடலூரில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சாகமூரி தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம்

சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

தோ்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே, எந்த ஒரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ தனி நபா்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், சுற்றுச் சுவா்களில் அவா்களது அனுமதியின்றி சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல், கொடிக் கம்பங்கள் நடுதல், பதாகைகள் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

தோ்தல் பிரசார களமாக மசூதி, தேவாலயம், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது. வாக்கு சேகரிக்க சமுதாயம், சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது. பிரசாரத்துக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அரசியல் கட்சியும், வேட்பாளரும் முன் அனுமதி பெற வேண்டும். பொதுக் கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக் கூடாது.

பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் புகைப்படம், விடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1800- 425-8530 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04142-220277, 220288 ஆகிய எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.காா்த்திக்கேயன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT