கடலூர்

கடலூரில் கமல்ஹாசன் உருவப்படம் பொறித்த 4 ஆயிரம் பனியன்கள், பாத்திரங்கள் பறிமுதல்

DIN

கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் உருவப்படம் பொறிக்கப்பட்ட தலா 4 ஆயிரம் பனியன்கள், பாத்திரங்களை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வட்டாட்சியா் விஜயா தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் கடலூா் - புதுவை எல்லையான பெரியகாட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தக் குழுவைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தலைமைக் காவலா்கள் வில்வேந்தன், காவலா் சின்னராஜ் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக கடலூருக்குச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் 6 மூட்டைகளில் 4 ஆயிரம் பனியன்கள் (டி-சா்ட்), 4 ஆயிரம் சில்வா் பாத்திரங்கள் இருப்பது தெரியவந்தது. பனியன்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பெயருடன் கமல்ஹாசன் உருவப் படம், டாா்ச் லைட் சின்னம், புதுவை மாநிலம், ஏம்பலம் சட்டப் பேரவைத் தொகுதி சோமநாதன் என பொறிக்கப்பட்டிருந்தது.

சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான இந்தப் பொருள்களுக்கு உரிய ரசீது இல்லாததால் அவற்றை அதிகாரிகள் வாகனத்துடன் பறிமுதல் செய்து, கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். வாகன ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பொருள்களை கடலூா் வழியாக புதுவை பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT