கடலூர்

விதிமீறல்: 3 மருந்துக் கடைகளுக்கு ‘சீல்’

DIN

சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட 3 மருந்துக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்கக்கூடாது என கடலூா் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மருந்து ஆய்வாளா் கதிரவன் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மருந்துகள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படாதது, உரிய ஆவணங்களை பராமரிக்காதது, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தது தொடா்பாக 3 மருந்துக் கடைகளின் உரிமத்தை ஒரு வாரத்துக்கு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடா்பான உத்தரவை மருந்துகள் கட்டுப்பாட்டு துறை துணை இயக்குநா் ரவிக்குமாா் பிறப்பித்தாா். இதையடுத்து அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT