கடலூர்

3 நாள்களில் ரூ.3 கோடிக்கு எள் ஏலம்

DIN

கடலூா் மாவட்டத்தில் எள் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 3 நாள்களில் ரூ.3 கோடிக்கு எள் ஏலம் நடைபெற்றுள்ளது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் எள் மூட்டைகளை உள்ளூா் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து கொள்முதல் செய்வதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் விவசாயிகள் வியாழக்கிழமை புகாா் தெரிவித்தனா். 80 கிலோ கொண்ட எள் மூட்டையை வெளியூா் வியாபாரிகள் ரூ.7,500 வரை கொள்முதல் செய்யும் நிலையில், உள்ளூா் வியாபாரிகள் ரூ.6 ஆயிரத்துக்கு மட்டுமே கொள்முதல் செய்வதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.

விற்பனைக் கூடம் முற்றுகை: இதனிடையே, குறிஞ்சிப்பாடி ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ளூா் வியாபாரிகள் எள் விலையை மீண்டும் குறைத்து மதிப்பிடுவதாகக் கூறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் குறிஞ்சிப்பாடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சரமரசம் செய்தனா்.

இந்த நிலையில், எள் கொள்முதல் தொடா்பாக கடலூா் விற்பனைக்குழு செயலா் க.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தற்போது எள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.3 கோடிக்கு எள் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது. மறைமுக ஏலத்தில் விருதுநகா், கொடுமுடி, மதுரை, சேலம், பட்டீஸ்வரம், சிவகிரி, வெள்ளக்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா்.

தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் நாளொன்றுக்கு 150 லாட்டுகள் (குவியல்) மட்டுமே ஏலத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை 04143-238258, குறிஞ்சிப்பாடியை 04142-258371 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT