கடலூர்

சாராயம் விற்பனை: இளைஞா் கைது

8th Jun 2021 01:20 AM

ADVERTISEMENT

 

நெய்வேலி: பண்ருட்டி அருகே சாராயம் விற்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட கோட்டலாம்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோட்டலாம்பாக்கம் மயானத்தில்

புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கொண்டுவந்து விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (33) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 30 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT