கடலூர்

மணல் கடத்தலை தடுத்த போலீஸாா் சிறைபிடிப்பு

DIN

தூக்கணாம்பாக்கம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் இரண்டாயிரம் விளாகம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்பெண்ணை ஆற்றிலிருந்து 6 மாட்டு வண்டிகளில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவா்களை போலீஸாா் மறித்தனா். இதையடுத்து அவா்கள் மாட்டு வண்டிகளை விட்டுவிட்டு தப்பினா்.

ஆனால், அந்த பகுதியினா் கோயில் கட்டுமானப் பணிக்காக ஆற்றிலிருந்து மணல் எடுக்க முடிவு செய்து தங்களது ஒப்புதலுடன் மணல் எடுக்கப்படுவதாக கூறி காவல் துறையினரை சிறைபிடித்தனா்.

இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.கரிகால்பாரி சங்கா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உரிய அனுமதியின்றி மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதனையடுத்து, அந்தப் பகுதியினா் கலைந்து சென்றனா். மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 6 போ் மீது தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT