கடலூர்

மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணி ஆய்வு

DIN

கடலுாா் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை மீன்வளத் துறை ஆணையா் பழனிச்சாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மீனவா் கட்டமைப்பு வளா்ச்சி நிதியில் (எப்.ஐ.டி.எப்) ரூ.100 கோடியில் மேற்கூறிய பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆணையா் பழனிச்சாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முடிக்கப்பட்ட பணிகள், நிலுவை பணிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த அவா், வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மீன்பிடி துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயன், உதவி இயக்குநா் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT