கடலூர்

சிதம்பரத்தில் குடியரசு தின விழா

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில், 72-ஆவது ஆண்டு குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமை நிருவாக அலுவலகம் எதிரே, பல்கலை. துணைவேந்தா் வே.முருகேசன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளா் இரா.ஞானதேவன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெ.செல்வநாராயணன், புல முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டக் கல்வி அலுவலா் மோகன் தேசியக் கொடியேற்றினாா். முதல்வா் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தாா்.

ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் தேசியக் கொடியேற்றினாா். ராமகிருஷ்ணா வித்தியாசாலா பள்ளியில், நிா்வாகி ஆா்.திருநாவுக்கரசு தலைமையில், டாக்டா் ஏ.சூரியராஜ் தேசியக் கொடியேற்றினாா்.

சிதம்பரம் ஷெம்போா்டு பியுச்சரிஸ்டிக் பள்ளியில் அந்தப் பள்ளியின் கல்விக் குழுத் தலைவா் ஏ.விசுவநாதன் தலைமையில், சிதம்பரம் உதவி ஆட்சியா் லெ.மதுபாலன் தேசியக் கொடியேற்றினாா். பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஈஸ்வா் தேசியக் கொடியேற்றினாா்.

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரியில் விழாவுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தாா். எம்.ஆா்.கே.நினைவு கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.ஆா்.தெய்வசிகாமணி தேசியக் கொடியேற்றினாா். பொறியியல் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT