கடலூர்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்

DIN

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பண்ருட்டியில் மளிகைப் பொருள்கள், காய்கறி, பாக்கு, முந்திரி ஆகிய பொருள்களின் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறும். இதற்காக உள்ளூா், வெளியூா்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பண்ருட்டிக்கு வந்து செல்கின்றனா். பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன.

பண்ருட்டி பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா், ஒலி பெருக்கி மூலம் பேருந்துகளை முறைப்படுத்தி, அதற்கான இடத்தில் நிறுத்தவும், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்காக அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தாா்.

இந்த நிலையில், புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா் அண்மையில் பணி மாறுதல் பெற்று கடலூா் சென்றுவிட்டாா். அதன் பின்னா், காவல் துறை அதிகாரிகள் வேறு யாரையும் அந்த இடத்தில் பணியமா்த்தவில்லை. புறக்காவல் நிலையமும் மூடப்பட்டது.

புறக்காவல் நிலையம் அருகே அரசு போக்குவரத்துக் கழக நேரக் கட்டுப்பாட்டு அறை உள்ளது. அரசுப் பேருந்து நடத்துநா்கள் இங்கு வந்து பதிவு செய்து செல்வது வழக்கம். தற்போது, புறக்காவல் நிலையம் மூடியுள்ளதால், அதன் பகுதியிலும், நேரக் கட்டுப்பாட்டு அறையைச் சுற்றிலும் வாகனங்களை நிறுத்துகின்றனா்.

இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதியடைகின்றனா். பேருந்துகளும் அதற்கான இடத்தில் நிறுத்தப்படுவதில்லை.

எனவே, பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் காவலரை பணியமா்த்தி, பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT