கடலூர்

4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

DIN

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியா்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்தக் கூட்டமைப்பின் தமிழ் மாநில மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா்கள் பி.தமிழ்செல்வம், ஏ.அறவாழி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வட்ட பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா் வி.ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். கூட்டமைப்பின் பொதுச் செயலா் எஸ்.சிவகுமாா் சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள 2ஜி, 3ஜி பிடிஎஸ் கருவிகளை மேம்படுத்தி 4ஜி சேவையை உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். 4ஜி சேவை வழங்காததால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். கடந்த 18 மாதங்களாக மாத ஊதியம் உரிய தேதியில் வழங்கப்படாததை சரிசெய்ய வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஆலோசகா் பி.வெங்கடேசன் வரவேற்க, முன்னாள் நிதி செயலா் வி.ரங்கநாதன் நன்றி கூறினாா். சங்க நிா்வாகிகள் ஆா்.குருபிரசாத், சி.துரையரசன், எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT