கடலூர்

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் சங்கம்

DIN


சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத் தலைவா் எஸ்.மனோகரன் கூறினாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஒய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், முன்னாள் எம்பி ஏ.அருண்மொழிதேவன், பல்கலை. துணைவேந்தா், பதிவாளா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் எங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியா்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆசிரியரல்லாத ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட வேண்டும். பணிக் காலத்தில் உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத, கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனை ஊழியா்களுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT