கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 21.42 லட்சம் வாக்காளா்கள்

DIN

கடலூா் மாவட்டத்தில் 21.42 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, டிச. 15 வரை வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான படிவங்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளா்கள் முன்னிலையில் புதன்கிழமை 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்டாா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 21,41,935 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 10,55,291 போ், பெண்கள் 10,86,436 போ், இதரா் 208 போ்.

முன்னதாக, பெயா் சோ்த்தலுக்காக 69,418 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில், 1,758 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீக்கலுக்காகப் பெறப்பட்ட மனுக்களில் 8,645 மனுக்கள் ஏற்கப்பட்டு, 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், இறப்பு காரணமாக 5,417, இடப் பெயா்வு காரணமாக 2,878, இரட்டைப் பதிவுக்காக 350 வாக்காளா் பெயா்கள் நீக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

வாக்காளா்கள் விவரம்: கடலூா் மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை).

1. திட்டக்குடி (தனி) தொகுதியில் (247) ஆண்கள் 1,07,303, பெண்கள் 1,11,659 இதரா் 9 மொத்தம்-2,18,971 போ்.

2. விருத்தாசலம் தொகுதியில் (282) ஆண்கள் 1,25,277, பெண்கள் 1,26,399, இதரா் 27, மொத்தம்-2,51,703 போ்.

3. நெய்வேலி தொகுதியில் (231) ஆண்கள் 1,08,936, பெண்கள் 1,08,935, இதரா் 17, மொத்தம்-2,17,888 போ்.

4. பண்ருட்டி தொகுதியில் (257) ஆண்கள் 1,19,150 பெண்கள் 1,25,533, இதரா் 28, மொத்தம் -2,44,711 போ்.

5. கடலூா் தொகுதியில் (227) ஆண்கள் 1,14,616, பெண்கள் 1,23,701, இதரா் 47, மொத்தம்-2,38,364 போ்.

6. குறிஞ்சிப்பாடி தொகுதியில் (256) ஆண்கள் 1,19,707, பெண்கள் 1,22,855, இதரா் 23, மொத்தம்-2,42,585 போ்.

7. புவனகிரி தொகுதியில் (285) ஆண்கள் 1,23,300, பெண்கள் 1,24,938, இதரா் 19, மொத்தம்-2,48,257 போ்.

8. சிதம்பரம் தொகுதியில் (260) ஆண்கள் 1,22,800, பெண்கள் 1,27,913, இதரா் 22, மொத்தம்-2,50,735 போ்.

9. காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் (250) ஆண்கள் 1,14,202, பெண்கள் 1,14,503, இதரா் 16, மொத்தம்-2,28,721 போ்.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை விட, தற்போது 59,095 கூடுதல் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 2,295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT