கடலூர்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2 புதிய மின் திட்டங்கள் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

DIN

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்படும் இரு புதிய மின் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் புதிதாக அமைத்துள்ள 1,000 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையத்தையும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அமைத்துள்ள 709 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையங்களையும் கடந்த 25-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இதில், நெய்வேலியில் ரூ.7,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கு 10 லட்சம் யூனிட் (1,000 மெகாவாட்) மின்சக்தி உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம், தலா 500 மெகாவாட் திறனுள்ள இரு மின் உற்பத்திப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இதேபோல, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 7 லட்சத்து 9 ஆயிரம் யூனிட் (709 மெகாவாட்) மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை ரூ.3,000 கோடியில் என்எல்சி அமைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT