கடலூர்

சிதம்பரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 07:55 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மற்றும் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் விழா 33 வார்டுகளிலும் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் வண்டிகேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் ஆகியோர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், முன்னாள் ஆவின் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, தலைமைக்கழக பேச்சாளர் தில்லை செல்வம், வழக்குரைஞர் வேணு புவனேஸ்வரன், எம்.யேசுராஜ், மாவட்ட பிரதிநிதி கே.நாகராஜ், நகர அவைத் தலைவர் தில்லை சேகர், வீரமணி, நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, தொழில்நுட்ப பிரிவு மணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT