கடலூர்

சிதம்பரம் நடராஜருக்கு பிப்.25-ல் மகாபிஷேகம்

22nd Feb 2021 12:39 PM

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் பிப்.25-ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது. 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ,மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். 

ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால்,தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம்  புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனர்.

Tags : Chidambaram Natarajar Temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT