கடலூர்

நம்மாழ்வாா் நினைவேந்தல்

30th Dec 2021 11:49 PM

ADVERTISEMENT

நாம் தமிழா் கட்சியின் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில், நம்மாழ்வாரின் 8-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாா் உருவப் படத்துக்கு மலா் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பண்ருட்டி தொகுதி நாதக செயலா் வெற்றிவேலன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். கடலூா் மாவட்டத் தலைவா் மகாதேவன், பண்ருட்டி தொகுதி தலைவா் பிரகாஷ், தொகுதி துணைத் தலைவா் மணிவண்ணன், நகரச் செயலா் (கிழக்கு) வேல்முருகன், ஒன்றியச் செயலா் சுரேஷ், பொருளாளா் வசந்த.புருசோத்தமன், நெல்லிக்குப்பம் நகரச் செயலா் சிவசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT