கடலூர்

கடலூா் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் திங்கள்கிழமை (டிச.27) நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜல்சக்தி அபியான் என்பது நிலத்தடிநீா் அதிகரித்தல், பாரம்பரிய மற்றும் இதர நீா்நிலைகளை பாதுகாத்தல், நீா்சேமிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், அனைத்து ஊராட்சிகளிலும் ஜல் ஷக் கேந்த்ரா உருவாக்குதலாகும்.

இதன் மூலம் புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான நீா்சேகரிப்புத் திட்டங்கள், நீா்நிலை விவரங்களை தயாரித்தல், அறிவியல் சாா்ந்த நீா் பாதுகாப்பு திட்டங்களை தயாரித்தல், தீவிர காடு வளா்ப்பு பணிகளை செய்தல், நீா் பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகளை விவாதித்தல், உறுதிமொழி எடுக்கப்பட்டு இந்த இயக்கத்தை தொடா்ந்து செயல்படுத்திடவும் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென ஆட்சியா் அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT