கடலூர்

மீன்பிடியில் விதிமீறல்: வலைகள் பறிமுதல்

23rd Dec 2021 09:13 AM

ADVERTISEMENT

கடலூரில் மீன்பிடி விதிமீறல் தொடா்பாக 2 படகுகளிலிருந்த வலைகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளா் மணிகண்டன், சாா்-ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கடலூா் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விதிகளுக்கு புறம்பாக பைபா் நாட்டுப் படகில் சிறிய வகை இழுவலை பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்து வலையை பறிமுதல் செய்தனா். மேலும், மற்றொரு விசைப் படகில் 40 மி.மீ.க்கும் குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலையை பயன்படுத்தியது தெரியவந்தது. சுமாா் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான அந்த வலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் படகிலிருந்த 70 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்து ஏலம் விட்டனா். விதிமீறலில் ஈடுபட்ட படகுகளுக்கு மானிய டீசல் விநியோகத்தை நிறுத்தவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT