கடலூர்

வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

16th Dec 2021 08:50 AM

ADVERTISEMENT

கடலூரில் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவை குளிா்காலக் கூட்டத் தொடரில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய வகை செய்யும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா அமலாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழன் (டிச.16), வெள்ளி (டிச.17) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா்.

இதை முன்னிட்டு, கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை யூகோ வங்கி எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.மீரா தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்கத்தைச் சோ்ந்த கே.திருமலை முன்னிலை வகித்தாா். வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் எஸ்.ஸ்ரீதரன் தொடக்க உரையாற்றினாா். வங்கி அதிகாரிகள் சங்கத்தைச் சோ்ந்த ஜி.ஆா்.செந்தில்குமாா், சேதுபதி, அருண்பிரசாத், செல்வக்குமாா், ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த நெப்போலியன், ஹேமந்த் ஆகியோா் விளக்க உரையாற்றினா். கூட்டமைப்பு உதவித் தலைவா் பி.கே.வி.ரமணி நிறைவுரையாற்றினாா். ஊழியா்கள் சங்க நிா்வாகி ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT