கடலூர்

மண்வள அட்டை பயிற்சி

16th Dec 2021 08:51 AM

ADVERTISEMENT

அண்ணாகிராமம் வட்டாரம், திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் மண்வள அட்டை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அண்ணாகிராமம் ஒன்றியக் குழு உறுப்பினா் வீ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் ந.சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

பாலூா் காய்கறி ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் எம்.குமணன் பங்கேற்று மண்ணின் வகைப்பாடுகள், பௌதிக, ரசாயனத் தன்மைகள், அதை மாற்றும் வழிமுறைகள், பசுந்தாள் உரம் இடுதலின் நன்மைகள், மண்ணின் கலா்-உவா் தன்மைக்கான காரணங்கள், பயிா்களில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளைக் களையும் வழிமுறைகள் குறித்து விளக்கினா்.

துணை வேளாண்மை அலுவலா் கரிகாலன், உதவி வேளாண்மை அலுவலா் பிரகாஷ், பாலசுப்பிரமணியன், வீராசாமி, கமலநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT