கடலூர்

சாலையில் தவறி விழுந்த பெண் லாரி மோதியதில் பலி

9th Dec 2021 08:42 AM

ADVERTISEMENT

கடலூா் அருகே சாலையில் தவறி விழுந்த பெண் மோதியதில் பலியானாா்.

கடலூா் வட்டம், டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த தண்டபாணி மனைவி ராஜலட்சுமி (54). புதன்கிழமை ராஜலட்சுமி தனது மகன் வெங்கடேசனுடன் (26) இரு சக்கர வாகனத்தில் கடலூருக்குச் சென்றாா். கடலூா் பாதிரிக்குப்பம் அருகே சென்ற போது, சாலையிலிருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனம் ஏறி இறங்கிய போது, ராஜலட்சுமி நிலைத் தடுமாறி சாலையில் விழுந்தாா்.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ராஜலட்சுமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான கேரள மாநிலம், ஆலப்புலாவைச் சோ்ந்த ரா.ரஞ்சித்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT