கடலூர்

கடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூரில் திங்கள்கிழமை காலை அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்திலும், மாலையில் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனா்.

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினா் மீது அமமுகவினா் தாக்குதல் நடத்தினராம்.

இதைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடலூரில் பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை காலை அதிமுகவினா் மாநில மீனவரணி இணைச் செயலா் கே.என்.தங்கமணி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, அதிமுகவின் உள்கட்சித் தோ்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூா்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே அதிமுகவினா் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா் தலைமையில் திரண்டு, பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வுகளில், மாவட்ட அதிமுக இளைஞரணித் தலைவா் ஆா்.மாதவன், இலக்கிய அணிச் செயலா் ஆா்.ஏழுமலை, மகளிரணிச் செயலா் ஆா்.கம்சலா, ஒன்றியச் செயலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில்: சிதம்பரம் வண்டிகேட் பகுதி ஜெயலலிதா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்டப் பொருளாளா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பாசறை செயலா் டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT